Marcel Sembat - தன் எழுத்தால் அரசியலை ஆட்டிவைத்தவர்!!
10 ஆவணி 2018 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18363
அரசியல் எப்போதும் ஊடகங்ககின் கைப்பாவை. ஊடகங்களே எப்போதும் அரசியை ஆட்டிவைக்கின்றது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அதுபோன்ற ஒரு அரசியல் பத்திரிகையாளர் ஒருவர் குறித்து பார்க்கலாம்.
அவரின் பெயர் Marcel Sembat. (சம்பத்??!!)
பரிசில், ஒக்டோபர் 19, 1862 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயது முதலே படிப்பில் பாரிய கெட்டிக்காரர். சிறுவயது கல்வியை முடித்துக்கொண்டு இள வயதில் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.
பின்னர் சட்டப்படிப்பில் PhD முடித்தார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது பத்திரிகைத் துறையை. பிரெஞ்சு அரசியல் சட்டங்களையும் யாப்புகளையும் மிக திறமையாக அறிந்திருந்ததால், அவரின் எழுத்துக்களில் மிக திறமையான கம்பீரமும் வீரியமும் உண்டானது.
இது பல அரசியல் தலைகளை உருட்டியது.
1890 ஆம் ஆண்டு evue de l'évolution எனும் பத்திரிகை ஆரம்பித்தார். La Petite République பத்திரிகையில் 'எடிட்டர்' ஆக பணி புரிந்தார்.
பின்னர்,
r La Revue socialiste,
La Revue de l'enseignement primaire,
Documents du Progrès,
La Lanterne,
Petit sou,
Paris-Journal
ஆகிய பத்திகைகளில் தன் அரசியல் ஆக்கங்களை தீர்க்கமாக எழுதி தள்ளினார். இறுதியாக L'Humanité பத்திரிகைக்கு 'எடிட்டர்' ஆனார்.
அரசியல் அரசியல் என எழுதி எழுதி, பின்னர் அவரே அரசியல்வாதியும் ஆனார்.
சோசலிச கட்சியில் இணைந்து, 1914 ஆம் ஆண்டு 'பொதுப்பணித்துறை அமைச்சர்' ஆக கடமையாற்றினார். அப்போதும் எழுத்துக்களை குறைத்துக்கொள்ளவில்லை. ஒரு சாராருக்கு சாதமாக எழுதுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தற்காலிகமாக எழுத்தை நிறுத்திவிட்டு, பின்னர் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் மீண்டும் தொடர்ந்தார்.
பிரெஞ்சு ஓவியர் Henri Matisse குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். ஓவியம் என்றதும் ஞாபகம் வருகிறது. இவர் ஓவியர் Georgette Agutte ஐ திருமணம் செய்துகொண்டார். அந்த உருக்கமான காதல் கதை <நேற்றைய பிரெஞ்சு புதினத்தில்> படித்திருப்பீர்கள்.
Marcel Sembat இன் பெயரில் பரிசில் ஒரு மெற்றோ நிலையமும், லீசேயும் உள்ளது.