Montreuil நகரம் - சில தகவல்கள்!!
5 ஆவணி 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18175
புறநகர் பரிசில் மிகவும் புகழ்பெற்ற நகரங்களில் Montreuilம் ஒன்று. மத்திய பரிசில் இருந்து 6.6 கி.மீ தொலைவில் கிழக்கு பகுதியில் உள்ளது Montreuil!
Le bas Montreuil, The Mairie, La Noue, Le Bel Air மற்றும் La Boissière பகுதிகளாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள் இந்த நகரத்தில் மொத்தமாக 103,000 மக்கள் வசிக்கின்றனர்.
'சோம்பி' உள்ளிட்ட பல வீடியோ கேம்ஸ்களை உருவாக்கும் Ubisoft நிறுவனத்தின் தலைமைச் செயலகம் இங்கு தான் உள்ளது. இந்த ஒரு பணம் கொழிக்கும் நிறுவனம், இந்நகரின் பிரதான பண வருவாய்.
பல உதைப்பந்தாட்ட வீரர்களையும், சினிமா பிரபலங்களையும், ஓவியர்கள், சிற்பிகள் உள்ளிட்ட பலரை உருவாக்கிய பெருமைமிகு நகரம் இதுவாகும். சார்லி-எப்த்தோ பத்திரிகையின் 'கேளிக்கைச் சித்திர' ஓவியர் Tignous கூட இங்கு தான் வசித்தார். ஆனால் அவர், சார்லி-எப்த்தோ தாக்குதலில் உயிரிழந்தார்.
Montreuil என்றால் என்ன? Monasteriolum எனும் வார்த்தை மருவித்தான் Montreuil எனும் பெய்ற் உருவானது. Monasteriolum என்றால் 'மடாலயம்' என பொருள். சிறிய மாடலயம் போல் இருப்பதால் இந்த நகருக்கு Montreuil என பெயர் வந்தது. தவிர, மடாலயத்தை சுற்றி வீடுகள் அமைக்கப்பட்டு மெல்ல மெல்ல நகரம் உருவானதாகவும் ஒரு வரலாறு உண்டு.
பல கல்லூரிகளும், பாடசாலைகள், வியாபாரத்தளங்களும் நிறைந்துள்ள இந்த நகர், மிக 'பிஸி'யான பரிஸ் புறநகர்களில் இதுவும் ஒன்று!!