Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் சாட்-ஜிபிடி.. ஓபன் ஏ.ஐ. அதிரடி அறிவிப்பு - எப்படி செயல்படும்?

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் சாட்-ஜிபிடி.. ஓபன் ஏ.ஐ. அதிரடி அறிவிப்பு - எப்படி செயல்படும்?

26 மார்கழி 2024 வியாழன் 09:45 | பார்வைகள் : 428


மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர். உலகளவில் 300 கோடி பேர் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் சாட்-ஜிபிடி அம்சத்தை பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் சாட்டிங் மூலம் மனிதர்கள் உரையாட சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

இது சாதாரண உரையாடல் தொடங்கி தொழில்துறையும் வளர்ந்து வரும் நுட்பமாக உள்ள நிலையில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் தற்போது வாட்ஸ்அப் செயலி மூலம் நேரடியாகவே சாட் -ஜிபிடி உடன் உரையாடும் அம்சத்தை அருகப்படுத்துவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 1-800-CHATGPT என்று அழைக்கப்படும் இந்த சாட் ஜிபிடி வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் உரையாட 1-800-242-8478 என்ற எண்ணை அழைத்தால் போதுமானது. ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் மெட்டா ஏஐ வசதி உள்ள நிலையில் இந்த சாட் ஜிபிடி அறிமுகம் பயனர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக சாட்- ஜிபிடி குறித்து அதை பயிற்றுவிக்கும் குழுவில் பணியாற்றிய ஓபன் ஏஐ முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி[ 26 வயது] அதன் தீமைகள் குறித்து எச்சரித்திருந்தார். கடந்த நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்