Paristamil Navigation Paristamil advert login

தலை மன்னாரில் சிறுமி வன்புணர்ந்து படு கொலை: நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தலை மன்னாரில் சிறுமி வன்புணர்ந்து படு கொலை: நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

26 மார்கழி 2024 வியாழன் 11:05 | பார்வைகள் : 397


தலை மன்னாரில் சிறுமி வன்புணர்ந்து படு கொலை: நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  55 வயதுடைய நபரை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) உத்தரவிட்டது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்தார்.

அவர், திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் அவரை ஒப்படைத்தனர்.
 
தலைமன்னார்  பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர்   மன்னார் நீதிமன்றத்தில் கடந்த  திங்கட்கிழமை (16) ஆஜர் படுத்தினர். சந்தேக நபரை டிசம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சந்தேக நபர்,  மன்னார் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அவரது விளக்கமறியலை  ஜனவரி 9 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந் தோப்பில் இருந்து மறு நாள் 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட சடலம் பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கி  கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

சம்பவத்தை அடுத்து, தோட்டத்தில் வேலை செய்து வந்த, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த  55 வயதுடைய   நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். எனினும், சுகயீனம் காரணமாக, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, கடந்த மே மாதம்   வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்