Paristamil Navigation Paristamil advert login

கிறிஸ்மஸ் இரவில் 107 அகதிகள் மீட்பு!!

கிறிஸ்மஸ் இரவில் 107 அகதிகள் மீட்பு!!

26 மார்கழி 2024 வியாழன் 11:23 | பார்வைகள் : 670


பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த 107 அகதிகள், கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 25, நேற்று புதன்கிழமை இரவு வடக்கு கடற்பிராந்தியம் வழியாக சிறிய படகுகளில் 107 அகதிகள் பயணித்துள்ளனர். Dunkerque நகர கடற்கரைகள் வழியாக அவர்கள் பிரித்தானியா நோக்கி பல்வேறு படகுகளில் பயணித்துள்ளனர். முதலில் 56 பேரைக் கொண்ட படகு ஒன்றை கடற்படையினர் மீட்டனர்.

அதன் பின்னர் 26 பேருடன் படகு ஒன்று மீட்கப்பட்டது. இவ்வாறாக அன்றைய இரவில் மட்டும் 107 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டனர்.

இவ்வருடத்தில் 73 அகதிகள் இதுபோன்ற கடற்பயணத்தில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்