Paristamil Navigation Paristamil advert login

Gladiator - துவிச்சக்கரவண்டி தயாரிப்பாளர்களின் கதை !!

Gladiator - துவிச்சக்கரவண்டி தயாரிப்பாளர்களின் கதை !!

3 ஆவணி 2018 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18554


வாகன ஓட்டிகளை விடவும், துவிச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கே ஐரோப்பா முழுவதும் மதிப்பு என்பது நீங்கள் அறிந்தது தான். இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரான்சில் 'ஒரு காலத்தில்' கொடிகட்டிப்பறந்த துவிச்சக்கர வண்டி நிறுவனம் ஒன்று குறித்து அறிந்துகொள்ளப்போகின்றோம்!!
 
பரிசின் புறநகர் பகுதியான Le Pré-Saint-Gervais இல் 1896 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. Gladiator நிறுவனத்தின் இலட்சினையோடு துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், மகிழுந்துகள் என பல வாகனங்களை தயாரித்தனர். இதில் மிக வெற்றி பெற்ற தயாரிப்பாக துவிச்சக்கர வண்டிகள் இருந்தது. 
 
இந்நிறுவனத்தின் உரிமையாளர் Alexandre Darracq. இவர் ஒரு கண்டுபிடிப்பாளர். புதிய புதிய வடிவிலான துவிச்சக்கர வண்டிகளை தயாரித்து பிரெஞ்சு சந்தையில் விற்பனைக்கு விட்டார். வியாபாரம் சூடு பிடித்தது. 
 
பிரபல பிரித்தானிய துவிச்சக்கர வண்டிகளின் தயாரிப்பு நிறுவனமான Humber Cycles, இந்த Gladiator நிறுவனத்தை தன் பங்காளராக இணையுமாறு கேட்டது. ஆனால் அது இடம்பெறவில்லை. 
 
துவிச்சக்கர வண்டி வியாபாரம் பிய்த்துக்கொண்டு செல்ல, மோட்டார் சைக்கிள்கள் மகிழுந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டது Gladiator நிறுவனம். போதிய நிதி வளம், பொருள் வளம் இல்லாமல் போக, புதிய தயாரிப்புக்ககிள் கவனம் செலுத்த முடியாமல் போக, துவிச்சக்கர வண்டிகளின் வியாபாரமும் காத்துப்போன டயர் போல் இறங்கியது. 
 
பின்னர், நிறுவனம் நஷ்ட்டத்தில் இயங்க, பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான Dunlop நிறுவனத்தின் ஒரு அங்கமான Clément நிறுவனத்துக்கு தனது அனைத்து பங்குகளையும் விற்றது Gladiator. 
 
Clément-Gladiator என பெயர் மாற்றம் கண்டு ஐரோப்பாவின் பல நாடுகளில் மீண்டும் இந்த வியாபாரம் தொடர்ந்தது. ஆனால் துரததிஷ்ட்ட வசமாக அதுவும் நீடிக்கவில்லை. 
 
பின்னர்  Société Française எனவும், Vinot et Deguingand எனவும் உரு மாற்றம் பெயர் மாற்றம் கண்டது. பின்னர் அது நிரந்தரமாக தனது தயாரிப்புக்களை நிறுத்திக்கொண்டது. 
 
நிறுவனம் மூடப்பட்டாலும், அதன் புதிய முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், துவிச்சக்கர வண்டிகளின் வியாபாரமும், அதன் தரமும் காலம் கடந்தும் புகழில் நிற்கும்!! 
 
 
 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்