பையில் கிடந்த ஆணின் சடலம்.. காவல்துறையினரின் விசாரணைகளில் குழப்பம்!!
27 மார்கழி 2024 வெள்ளி 08:04 | பார்வைகள் : 1019
கடந்த ஜூன் மாதம் முதல் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஒருவரது சடலம் டிசம்பர் 24 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Mulhouse நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் ஒருவர், 30 வயதுடைய ஒருவருக்கு வீடொன்றை வாடகைக்கு விட்டிருந்தார். அவர் கடந்த ஜூன் மாதம் வீடு வாடகை செலுத்தவில்லை எனவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு, வீட்டின் கதவை உடைத்துள்ளார்.
வீட்டின் உள்ளே உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்றபோது, வீட்டினுள் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருந்துள்ளது. அதனை திறந்தபோது, அதற்குள்ளே சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் இருப்பதை பார்ர்துவிட்டு, காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அதை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த சடலத்தை இலகுவாக அடையாளம் கண்டுகொண்டார். கையில் குத்தப்பட்டிருந்த 'டாட்டூ'வினை வைத்து அவர் அடையாளம் காணப்பட்டதாகவும், அவரே வீட்டில் வசித்த நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.