Musée de la Poupée - இது பொம்மைகளின் கதை!!
2 ஆவணி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18575
மனிதர்களின் வளர்ச்சியை போலவே பொம்மைகளின் வளர்ச்சியும். தொழில்நுட்பம் வளர, பொம்மைகளின் வளர்ச்சியும் மாறிக்கொண்டே வருகின்றது. பிரெஞ்சு தேசத்திலும் பொம்மைகளின் கதை அளப்பரியது.
பிரெஞ்சுக்குழந்தைகளிடம் புகழ்பெற்ற பல பொம்மைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
Musée de la Poupée! என்பதே அந்த அருங்காட்சியகம். இங்கு சென்றால்.. பிரான்சில் 70 ஆம் 80 ஆம் 90 ஆம் ஆண்டுகளின் குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகளின் அணிவகுப்பை காணலாம்.
அக்காலத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள்.. இறப்பர் பொம்மைகள், மர பொம்மைகள், அழகுக்கு வைக்கும் அலுமினிய பொம்மைகள் என பல 'கலெக்ஷன்ஸ்' இங்கு உண்டு.
கிட்டத்தட்ட 1800 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்ட பொம்மைகள் இங்கு உண்டு. பிரெஞ்சு மக்களின் கொள்ளுத்தாத்தாக்கள் பாட்டிகள் விளையாடிய பொம்மைகள் நீங்கள் பார்க்க நேர்ந்தால், வியப்பில் ஆழ்வீர்கள்...
இங்கு மொத்தமாக 500 பொம்மைகள் நிரந்தரமாக உள்ளன. 1994 ஆம் ஆண்டு இந்த அருங்காட்கியகம் திறக்கப்பட்டது.
பரிசின் மூன்றாம் வட்டாரத்தில் உள்ள 22 rue Beaubourg இல் உள்ளது இந்த அருங்காட்சியகம்.
கொஞ்சம் பொறுங்கள்... இந்த அருங்காட்சியகத்துக்கு போதிய வருமானம் இல்லாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் மூடிவிட்டார்கள். அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டால், விரைவில் மீண்டும் திறக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
தொடர்புகொண்டு கேட்டுவிட்டு செல்லவும்!!