Paristamil Navigation Paristamil advert login

கோமாளி கோலி என விமர்சித்த அவுஸ்திரேலிய ஊடகம்... எதிர்ப்பு தெரிவித்த ரவி சாஸ்திரி

கோமாளி கோலி என விமர்சித்த அவுஸ்திரேலிய ஊடகம்... எதிர்ப்பு தெரிவித்த ரவி சாஸ்திரி

27 மார்கழி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 2803


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கோமாளி கோலி என அவுஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்ன் விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவுஸ்திரேலிய ஊடக நிபுணர்களிடம் கூறினார்.

அப்போது, செய்தியாளர் ஒருவரிமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 19 வயது வீரரான ஷாம் கோன்ஸ்டாஸை மோதினார். இந்த விவகாரத்துக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20% அபராதம் கோலிக்கு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விராட் கோலியின் செயலுக்கு அவுஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. அந்தவகையில், வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா என்ற செய்திதாள் ஒன்று கோலியின் புகைப்படத்தை கோமாளி போல் மாற்றி clown கோலி என தலைப்பு வைத்துள்ளது.

இந்த செயலுக்கு ரவி சாஸ்திரி மற்றும் கவாஸ்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், "இந்த முறையும் தொடரை வெல்ல முடியவில்லை என்ற விரக்தியில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் இவ்வாறு செய்கின்றன.

அதனால் தான் மொத்த நாடும் இந்திய வீரர்களை தாக்கி விமர்சிக்கிறது" என்றார். அதேபோல அவுஸ்திரேலியா ஊடகங்களின் செயலுக்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.           

வர்த்தக‌ விளம்பரங்கள்