IND W vs WI W 3rd ODI: தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி
27 மார்கழி 2024 வெள்ளி 13:13 | பார்வைகள் : 136
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
முதல் போட்டியில் இந்திய அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 115 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
3 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ரேணுகா சிங் தாக்கூர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வதோதராவில் உள்ள கோட்டாம்பி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 38.5 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தீப்தி சர்மா ஆல்ரவுண்ட் திறனை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.