Paristamil Navigation Paristamil advert login

Himalayan-க்கு போட்டியாக Kawasaki அறிமுகம் செய்துள்ள டூயல்-ஸ்போர்ட் பைக்

Himalayan-க்கு போட்டியாக Kawasaki அறிமுகம் செய்துள்ள டூயல்-ஸ்போர்ட் பைக்

27 மார்கழி 2024 வெள்ளி 13:18 | பார்வைகள் : 169


Kawasaki KLX230 டூயல்-ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ரூ.3.30 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Kawasaki India தனது முதல் road-legal dual-sport motorcycle KLX230-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்கில் disc brakes மற்றும் all LED lighting setup with switchable ABS உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஒற்றை வேரியண்டாக இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் Lime Green மற்றும் Battle Grey என இரண்டு வண்ண விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.3 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இது இப்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்கிறது. இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விநியோகம் செய்யப்படும்.


இந்த பைக் இந்தியாவில் Hero XPulse 200 4V மற்றும் Royal Enfield Himalayan ஆகியவற்றுடன் போட்டியிடும்.

KLX230 ஆனது KLX குடும்பத்தை நினைவூட்டும் மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இது hexagonal headlights, மெல்லிய single-piece seat, beak-like fender மற்றும் 7.6-litre fuel tank ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது தவிர, monotone LCD with Bluetooth connectivity மற்றும் விருப்பமான கீழ் இருக்கை ஆகியவை இந்த பைக்கில் உள்ளன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்