ரஜினி படத்தில் மீண்டும் தமன்னா?
27 மார்கழி 2024 வெள்ளி 13:55 | பார்வைகள் : 211
ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னா ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும், அவரது அந்த கேரக்டர் அந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்திலும் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்த இந்த படம் ₹600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கூலி’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக, அவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ’ஜெயிலர் 2 ’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும், லொகேஷன் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் பாகத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த தமன்னா, இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமின்றி, பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் இணைகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.