Paristamil Navigation Paristamil advert login

Bois-d'Arcy காடுகள் - சில அட்டகாசமான தகவல்கள்!!

Bois-d'Arcy காடுகள் - சில அட்டகாசமான தகவல்கள்!!

1 ஆவணி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 19165


Bois-d'Arcy என்றால் பல அடையாளங்களைச் சொல்லலாம்... இங்குள்ள சிறைசலை மிக பிரபலம். 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் கூட மிக பிரபலம். ஆனால் காடு??
 
Yvelines மாவட்டத்தின் Les Clayes-sous-Bois பகுதியையும் Bois d'Arcy பகுதியையும் இந்த காடுகள் ஆக்கிரமித்துள்ளன. 
 
450 ஹெக்டேயர்கள் கொண்டது இந்த காடு. எட்டு கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. இந்த காட்டின் 60 வீதத்தை Castanea மரங்களும், Oak மரங்களும் கொண்டுள்ளது. இரண்டும் பிரெஞ்சு தேசத்தின் அடையாளங்கள். 
 
மிகுதி 40 வீதத்தில் 30 வீதம் ஏனைய செடி கொடிகள் தாவரங்களும், 10 வீதம் எரிந்துபோன மரங்களும் நிறைந்து நிற்கின்றன. 
 
இந்த காட்டுக்குள் 1638 ஆம் ஆண்டைச் சேந்த 'தாதாவுக்கெல்லாம் தாதா' மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அந்த மரங்களை எல்லாம் அரசு கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி விழித்திருந்து பாதுகாக்கின்றது. 
 
இந்த மரங்கள் 15 ஆம் நூற்றாண்டின் கடும் குளிர் காலத்தில் உயிரிழக்க பார்த்தது. பின்னர் 'ஒட்டு மரங்கள்' எனும் படிமுறையில் மரங்களை அரசு காப்பாற்றி விட்டது. 
 
மரங்கள் வெட்டுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அப்பகுதி காவல்துறையினரின் தலையாய வேலை. 
 
காடுக்குள் ஒரு ஒற்றையடி பாதை உண்டு... அதுபோல் ஒரு அமைதியான இடம் வேறில்லை. நடந்து செல்ல எல்லாம் அனுமதி உண்டு. கடும் பனி காலத்தில் இலைகள் எல்லாம் கொட்டி வெறும் வெள்ளைப்பனி மூடியிருக்கும் போது அந்த காட்டுக்குள் ஒரு 'ரவுண்டு' வருவது ஒரு திகிலான அனுபவம். 
 
அதேபோல் இலையுதிர் காலத்தில் சருகுகள் கொட்டித்தீர்ந்த பாதையில் நடந்து செல்வதும் ஒரு வகையான அலாதியான இன்பம். 
 
ஒரு விடுமுறை நாளில் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஒரு 'அட்வெஞ்சர்' ட்ரிப் போய்வரலாமே??!!
 
மரங்களே இயற்கையின் சரிசமத்தை பேணுகிறது. காடுகள் வெறுமனே காடுகள் அல்ல!!
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்