ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கப்போகும் கமல்

27 மார்கழி 2024 வெள்ளி 14:00 | பார்வைகள் : 3341
நடிகர் கமல்ஹாசனை பொருத்தவரை தான் நடிக்கும் படங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்களுக்கு புதுப்புது அனுபவங்களை கொடுப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். மணிரத்னம் இயக்கி உள்ள தக்லைப் படத்தில் நடித்து முடித்துவிட்டு அமெரிக்கா சென்று உள்ள கமல் அங்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயின்று வருகிறார்.
அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சினிமாவே வியக்கும் வகையில் ஒரு அதிநவீன தொழில்நுட்பத்தை கமல் அறிமுகப்படுத்தப் போகிறாராம். அதற்காகவே தற்போது அமெரிக்க சென்றுள்ளார். அதனால் கமலின் 237வது படம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.