ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்

28 மார்கழி 2024 சனி 07:59 | பார்வைகள் : 4985
இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைத்து வசூலில் புதிய சரித்திரத்தை படைத்தது. அதைத் தொடர்ந்து இவர் ஆர்.ஆர்.ஆர் படத்தையும் இயக்கி மீண்டும் வெற்றி கண்டார்.
தற்போது இவர், மகேஷ் பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். ‘SSMB29‘ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பா தகவல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகர் பிரத்விராஜ் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் பான் இந்திய அளவில் உருவாகும் இந்த படத்தினை அமேசான் காடுகளில் படமாக திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும் 2027-இல் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் புதிய அப்டேட் அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1