முருங்கைக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா ?
28 மார்கழி 2024 சனி 08:04 | பார்வைகள் : 193
நம்முடைய வீட்டு பகுதியில் அருகில் சுலபமாக கிடைக்கக்கூடிய முருங்க மரத்தில் இருக்கக்கூடிய முருங்கைக்காய் நமது உடலுக்கு அவ்வளவு நன்மைகளை கொடுக்கும் என சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கா... நம்முடைய மதிய உணவுல அதிகமா சேர்த்துக் கொள்ளக்கூடிய இந்த முருங்கைக்காய் நமக்கு தெரியாமல் உடம்புக்கு எந்த மாதிரியான நன்மைகளை தருகின்றது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாமா...
பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை அடிக்கடி ஏற்படக்கூடிய செரிமான பிரச்சனைக்கு முக்கிய நன்மை அளிக்கின்றது. உடலுக்கு தேவையான நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை உள்ளடியக்கியதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக குடல் இயக்கத்தை சீராக்கி வயிறு சம்மந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கின்றது.
முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு நுரையீரலுக்கு முருங்கைக்காய் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. விட்டமின் சி-யும் இதில் இருப்பதால், தொற்று, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகின்றது.
அதேபோல், முருங்கைக்காயில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதினால் எலும்புகளுக்கு அதிக நன்மை தருகின்றது. எனவே எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முருங்கைக்காயில் இருப்பதால் வாரம் ஒருமுறையேனும் எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் வரும் எலும்பு பிரச்சனைகளையும் தவிர்க்காலாம்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த ஆதாரமாக முருங்கைக்காய் இருக்கின்றது. ஏனென்றால் இருமல், சளி போன்ற தொற்று பாதிப்புகளுக்கு முருங்கைக்காயில் விட்டமின் சி இருப்பதினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றது. ஆன்டி பயாடிக் ஏஜெண்டாக முருங்கைக்காய் செயல்படுவதால் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிற்து. இதனால் இரத்ததின் ஆக்சிஜன் அளவு மேம்படுகிறது. அதாவது இரத்தத்தில் தரத்தை மேம்படுத்த முருங்கைக்காய் உதவுகிறது.
குறிப்பாக, முருங்கைக்காய் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் முருங்கை இலையை காய வைத்து அதை பொடியாக்கி முகத்தில் அப்ளை செய்தாலே முகப்பரு, வெயில் கருமை போன்றவை நீங்கும். அதோடு ஃபேஷியல் செய்த பொலிவு கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.