கனடாவில் கிரிப்டோ மோசடி - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
28 மார்கழி 2024 சனி 09:20 | பார்வைகள் : 8960
கனடாவில் கிரிப்டோ மோசடி சம்பவங்கள் அதிகளவாக இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
மில்லியன் கணக்கான டாலர்களை கனடியர்கள் இழப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் ஆரம்பத்தில் கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த ஒன்றாரியோ பிரஜைகள் சுமார் 23 மில்லியன் டாலர்களை இழந்துள்ளனர்.
கிரிப்டோ முதலீட்டு திட்டங்களில் பலர் இவ்வாறு பணத்தை முதலீடு செய்து இவ்வாறு பணத்தை இழந்துள்ளனர்.
பல்வேறு மோசடியாளர்கள் இவ்வாறு கிரிப்டோ நாணயங்களை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்து மோசடி செய்வதாகவும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிஜிட்டல் நாணயங்களின் பிரபல்யம் அடைந்து வரும் நிலையில் கிரிப்டோ நாணய முதலீட்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிரிப்டோ நாணயங்கள் பல்வேறு நாடுகளில் காணப்படுவதனால் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் பெரும் சவால்களை எதிர் நோக்க நேரிடுவதாகவும் எல்லா நாடுகளின் அரசாங்கங்களும் மோசடிகளை கண்டுபிடிப்பதில் உதவுவதில்லை எனவும் கனடிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கிரிப்டோ நாணய கொடுக்கல் வாங்கல்களில் சுமார் 94 மில்லியன் டாலர்களை இழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்து மோசடிகளில் சிக்கி இழக்கப்பட்ட மொத்த தொகை 124 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan