பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து விபத்து...! 8 பேர் பலி

28 மார்கழி 2024 சனி 10:11 | பார்வைகள் : 9023
பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பிரேசிலில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த 22ம் திகதி இடிந்து விழுந்தது.
இதன்போது அந்த பாலத்தில் 3 லாரிகள், பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் குறைந்தது 2 கார்கள் ஆற்றில் விழுந்தது.
இதையடுத்து அங்கு கடற்படை, சார் மற்றும் மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் விழுந்த 3 லாரிகளில் இரண்டில் கந்தக அமிலம் இருந்ததால், அப்பகுதியில் உள்ள 19 நகராட்சிகளில் குடிநீரை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025