Fort de Brégançon தீவில் இருந்து ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தி!
28 மார்கழி 2024 சனி 11:15 | பார்வைகள் : 695
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Fort de Brégançon தீவில் இருந்து தனது புதுவருட வாழ்த்துச் செய்தியினை வெளியிட உள்ளார்.
டிசம்பர் 31 ஆம் திகதி ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிடுவது சம்பிரதாயமான ஒன்றாகும். இம்முறை அவர் எலிசே மாளிகையில் வைத்து அதனை தெரிவிப்பதற்கு பதிலாக, பிரெஞ்சு ஜனாதிபதிகள் ஓய்வெடுக்கும் Fort de Brégançon தீவில் வைத்து வாழ்த்துச் செய்தியினை வெளியிட உள்ளார்.
கடந்த நாட்களில் ஜனாதிபதி மக்ரோன் பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளார். பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தினை கொண்டுள்ள அவர், கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று பிரதமரை சந்தித்துள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு நடுவே அடுத்த இரண்டுவருடங்களுக்கான அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.