Paristamil Navigation Paristamil advert login

Électricité : பெப்ரவரியில் கட்டணம் குறைகிறது..??

Électricité : பெப்ரவரியில் கட்டணம் குறைகிறது..??

28 மார்கழி 2024 சனி 11:24 | பார்வைகள் : 1373


புதிய ஆண்டில் மின்சாரக்கட்டணம் குறைவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரிக்கு பதிலாக பெப்ரவரி மாதத்தில் குறைக்கப்பட உள்ளது.

14% சதவீதத்தால் மின் கட்டணம் குறைய உள்ளது. பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இந்த கட்டணம் குறைவடையும் என இன்று டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டணக்குறைப்பினால் 22.4 மில்லியன் குடும்பங்கள் பலனடைய உள்ளனர்.

மிஷல் பார்னியே அரசாங்கம் கொண்டுவந்திருந்த இந்த அறிவிப்பு, அவரது அரசாங்கம் கவிழ்ந்ததும் நடைமுறைக்கு வராது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வர்த்தமானியில் வெளியானது நற்செய்தியாக அமைந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்