Paristamil Navigation Paristamil advert login

முகமது சிராஜை அணியில் நீக்க வேண்டும்-அவரின் தவறை சுட்டிக் காட்டுங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து

முகமது சிராஜை அணியில் நீக்க வேண்டும்-அவரின் தவறை சுட்டிக் காட்டுங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து

28 மார்கழி 2024 சனி 12:35 | பார்வைகள் : 191


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து முகமது சிராஜை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

அவுஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் முடிவில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் இதுவரை குவித்துள்ளது.

5 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணி 310 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.

அத்துடன் 3வது நாள் ஆட்டம் முழுவதும் ஜடேஜா, ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய நால்வரை நம்பியே உள்ளது.

474 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையை சிரமமின்றி அவுஸ்திரேலிய குவித்ததை அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 23 ஓவர்கள் பந்துவீசி 122 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாதது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், முகமது சிராஜ் வெறும் 13 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மோசமான ஆட்டத்தின் காரணமாக இந்திய வீரர் சிராஜ் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறிய கருத்தில்  "ஓய்வு என்ற பெயரில் வீரர்களின் தவறுகளை மறைக்க முடியாது. சிராஜ் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதை நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர் நீக்கப்படுவதன் மூலம், தனது செயல்பாட்டை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்வார்" என்று தெரிவித்துள்ளார்.

"சிராஜ் இந்திய மண்ணில் கூட விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறினார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அவுஸ்திரேலிய பிட்சில் கூட அவர் தனது திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே அவரை அணியில் இருந்து நீக்கி, பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்சித் ராணா போன்ற வேறு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.