Paristamil Navigation Paristamil advert login

CALL மற்றும் SMS சேவைகளுக்கு இனிமேல் தனி ரீசார்ஜ்.. டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த டிராய்

CALL மற்றும் SMS சேவைகளுக்கு இனிமேல் தனி ரீசார்ஜ்.. டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த டிராய்

28 மார்கழி 2024 சனி 12:45 | பார்வைகள் : 436


இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) TELIKAAMநிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத சேவைகளை ரீசார்ஜ் பேக் உடன் இணைத்து அதிக நிதி சுமையை உருவாக்குகின்றன.

அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளரிடம் கூடுதல் சேவைகள் திணிக்கப்படுகின்றன. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

எனவே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு பிளான்களை கட்டாயமாக்குவது, இன்டர்நெட் தேவையில்லாத வாடிக்கையாளர்களின் தேவையற்ற சுமையை தீர்க்கும் என டிராய் தெரிவித்துள்ளது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்