Mayotte தீவுக்குச் செல்கிறார் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ!

28 மார்கழி 2024 சனி 13:42 | பார்வைகள் : 6308
Mayotte பிரெஞ்சுத் தீவினை 'chido' புயல் தாக்கி இரு வாரங்களின் பின்னர், வரும் திங்கட்கிழமை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அங்கு செல்கிறார்.
முதலில் நாளை ஞாயிற்றுக்கிழமை செல்வதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அந்த பயணம் ஒருநாள் பிற்போடப்பட்டு, டிசம்பர் 30 ஆம் திகதி அவர் Mayotte செல்கிறார்.
கடந்தவாரம் ஜனாதிபதி மக்ரோன் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டிருந்தார். அதன்போது Mayotte மக்களுக்கும் ஜனாதிபதி மக்ரோனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
Chido புயல் காரணமாக Mayotte தீவில் வசிக்கும் 39 பேர் பலியாகியிருந்தனர். 4,000 பேர் வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.