Paristamil Navigation Paristamil advert login

Bondy! - உதைப்பந்தாட்ட வீரர்களின் பிறப்பிடம்!!

Bondy! - உதைப்பந்தாட்ட வீரர்களின் பிறப்பிடம்!!

20 ஆடி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19236


சமீபத்திய நாட்களில் Kylian Mbappé பற்றி எங்கு தகவல் வந்தாலும்.. கூடவே Bondy நகர் பற்றியும் தகவல்கள் வெளிவரும். Bondy நகரின் ஹீரோ எனவும் Mbappé ஐ அழைப்பதுண்டு. 
 
ஆனால், Mbappé மட்டும்தானா இங்கு பிரபலம் என்றால்.. அதுதான் இல்லை... வழக்கத்துக்கு மாறாக Bondy இல் பல உதைப்பந்தாட்ட வீரர்கள் உருவாகியுள்ளார்கள். உருவாக்கப்பட்டு வருகின்றார்கள். 
 
இயல்பாகவே Bondy நகர இளைஞர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கே உதைப்பந்தாட்டம் தான். சிறந்த வீரர்கள் இங்குள்ள சிறு சிறு மைதானங்களில் இருந்து இரத்தினங்கள் போல் கண்டெடுக்கப்படுகின்றனர். 
 
மெடல்களை கிலோ கணக்கில் குவித்தி வைத்திருக்கும் வீரரான Serge Gakpé இங்குதான் பிறந்தார். 
 
1985 ஆம் ஆண்டு பிறந்து, தேசிய மட்டத்தில் பல அணிகளுடன் ஆடும் திறமையாளர் Max Hilaire இங்கு உருவானார். 
 
உள்ளூர் அணிக்காக விளையாடும் சிறந்த வீரரான Steeven Joseph-Monrose, தேசிய அணியில் விளையாடிய Kevin Lafrance, பல்வேறு உள்ளூர் பிரெஞ்சு அணிகளுக்காக விளையாடும் Sylvain Meslien தவிர, Guy Moussi, Michaël Niçoise என பலரும் இங்கு வளர்ந்தவர்கள் தான். 
 
இவை தவிர, பல உதைப்பந்தாட்ட அணிகளும், க்ளப்புகளும் இங்கு குவிந்துள்ளன. Bondy என்றதும் பலருக்கு உதைப்பந்தாட்டமே ஞாபகத்துக்கு வரும். இங்கிருந்து சென்ற ஒருவர் தான் 2018 ஆம் ஆண்டு உலக்கிண்ணத்தை கைப்பற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்