Paristamil Navigation Paristamil advert login

Hamida Djandoubi என்பவரின் கதை!!

Hamida Djandoubi என்பவரின் கதை!!

14 ஆடி 2018 சனி 10:30 | பார்வைகள் : 21070


Hamida Djandoubi என்பவரின் கதை!!
 
இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவனின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..!!
 
ஆனால் அது ஒன்றும் பெரிய ஆச்சரியமான வாழ்க்கை கதை இல்லை. குறித்த நபர் ஒரு மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி. 
 
துனிசியா நாட்டில் செப்டம்பர் 22 ஆம் திகதி 1949 ஆம் ஆண்டு பிறந்த  Hamida Djandoubi, தன்னுடைய 21 வயதுடைய காதலியை கொலை செய்துவிட்டான். 
 
Élisabeth Bousquet எனும்  21 வயதுடைய அவனுடைய காதலியை 1973 ஆம் ஆண்டின் ஒருநாளில், கடத்தி, சித்திரவதை செய்து, சிகரெட்டால் எல்லாம் சுட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டான். 
 
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மகிழுந்து ஒன்றுக்குள் சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த தகவல் வெளியில் வந்தது. 
 
தவிர, மேலும் இரு பெண்களை கடத்தி மறைத்து வைத்துள்ளான். ஆனால் அவர்கள் எப்படியோ ஒருவழியாக தப்பித்துச் சென்றுவிட்டனர். 
 
பின்னர்  அவன் கைது செய்யப்பட்டு,  விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டான்.  அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 
 
மார்செயில் உள்ள Baumettes சிறைச்சாலையில், செப்டம்பர் 10 ஆம் திகதி 1977 ஆம் ஆண்டு அதிகாலை நான்கு மணிக்கு, 'கில்லட்' என அழைக்கப்படும் அந்த இயந்திரத்தில் படுக்க வைக்கப்பட்டு, கைகள் கால்கள் பிணைக்கப்பட்டது. 
 
அதிகாலை, 4.40 மணி. கில்லட் எனும் அந்த இயந்திரத்தின் 'ப்ளேட்' போன்ற பகுதி சரேல் என வேகமாக இறங்கி சிரத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் துண்டாக்கியது. 
 
பிரான்சில் வழங்கப்பட்ட இறுதி மரண தண்டனை அதுவாகும்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்