Paristamil Navigation Paristamil advert login

பார்வையற்றவர்களுக்கு எதிரே இருப்பது குறித்து தெரிவிக்கும் நவீன கண் கண்ணாடி

பார்வையற்றவர்களுக்கு எதிரே இருப்பது குறித்து தெரிவிக்கும் நவீன கண் கண்ணாடி

29 மார்கழி 2024 ஞாயிறு 15:40 | பார்வைகள் : 560


பார்வையற்றவர்களின் வசதிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் ஏஐ தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் எதிரே வருபவர்களைப் பற்றி சொல்வதைத் தவிர, வரும் வாகனங்களைப் பற்றி எச்சரித்து விபத்துகளில் இருந்து காக்கிறது. நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதற்கு இது வழிகாட்டுகிறது.

பார்வையற்ற மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உதவியுடன் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி 4 மாதங்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை தயார் செய்து விட்டன.

தற்போது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்த கண்ணாடிகள் கிடைக்கின்றன. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.