கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?
29 மார்கழி 2024 ஞாயிறு 15:32 | பார்வைகள் : 6902
நடிகை கீரத்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் முதல் முறையாக ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக 'பேபி ஜான்' எனும் படத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ், ஆண்டனி என்ற அவரது நீண்ட வருட காதலரை கரம் பிடித்தார். தற்போது திருமணம் ஆனதால் சினிமாவில் இருந்து முழுமையாக விலக கீர்த்தி சுரேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷ் கைவசமாக ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த தகவலை இப்போது வரை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்யவில்லை. எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கொடுக்கவில்லை. அதே சமயம் இந்த வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் எந்த ரியாக்ஷனும் இதுவரை கொடுக்கவில்லை.
நடிகைகள் திருமண பந்தத்தில் இணையும் போது, சினிமாவில் இருந்து விலகல் என்ற தகவல் பரவுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருவது தான். ரேவதி, சுஹாசினி தொடங்கி இப்போது கீர்த்தி சுரேஷ் வரை காலம் காலமாக சினிமா நடிகைகள் இந்த வதந்திகளை எதிர் கொண்டு தான் வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan