Paristamil Navigation Paristamil advert login

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் பற்றி தெரியுமா ?

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்  பற்றி தெரியுமா ?

29 மார்கழி 2024 ஞாயிறு 15:43 | பார்வைகள் : 417


நுரையீரல் என்பது மனிதனின் உடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில், நுரையீரலை பாதுகாக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூண்டு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொண்டால், அவை நச்சுக்களை அழிக்கும் தன்மை உடையவை என்பதால், நுரையீரலுக்கு பாதுகாப்பாக இருக்கும். அதேபோல், ஆப்பிள் தொடர்ந்து சாப்பிட்டால், நுரையீரல் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற உணவுகளில் ஆன்ட்டி ஆக்சிடன்ஸ் அதிகமாக இருப்பதால், நுரையீரல் தொற்று வராட்க்யு, திராட்சையில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நுரையீரலை சுத்தம் செய்ய பயன்படும்.

மாதுளம் பழம், பிஸ்தா, வரமிளகாய் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள வெங்காயம் ஆகியவையும் நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள் ஆகும்.

நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், சோடா மற்றும் மதுபானத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வெறும் நீரை மட்டுமே பருக வேண்டும்