மீண்டும் இணையும் ‘சுந்தரபாண்டியன்’ படக் கூட்டணி!

29 மார்கழி 2024 ஞாயிறு 15:59 | பார்வைகள் : 5702
2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சுந்தரபாண்டியன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரபாகரன் இயக்கியிருந்தார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து சூரி, இனிகோ பிரபாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் பிரபாகரன், கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களை இயக்கினார்.
அடுத்தது தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார் பிரபாகரன்.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயம் இயக்குனர் பிரபாகரன், நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாகவும் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துப் போக விஜய் சேதுபதி, பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் விஜய் சேதுபதி, பிரபாகரன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
மேலும் விஜய் சேதுபதி, காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவர்தான் நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1