புதுவருட நிகழ்வுகள்.. 10,000 பாதுகாப்பு படையினர் குவிப்பு!!
29 மார்கழி 2024 ஞாயிறு 18:10 | பார்வைகள் : 1394
புதுவருட கொண்டாட்டத்தின் போது பாதுகாப்புக்காக 10,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர்.
புத்தாண்டினை வரவேற்க பரிஸ் மாநகரம் தயாராகியுள்ளது. சோம்ப்ஸ்-எலிசேயில் இரவு வானவேடிக்கை நிகவுகளும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. ஆண்டு தோறும் இடம்பெறுவது போல் 31 ஆம் திகதி இரவு போக்குவரத்து இலவசமாகவும், இரவு முழுவதும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்வுகளின் போது அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் இருக்க, பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் குவிக்கப்பட உள்ளனர். மொத்தமாக 10,000 பாதுகாப்பு படையினர் பரிசில் குவிக்கப்பட உள்ளதாக காவல்துறை தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.