Paristamil Navigation Paristamil advert login

உயர்கல்வி பயிலாத பெண்களே இல்லை என்பதே இலக்கு; முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பயிலாத பெண்களே இல்லை என்பதே இலக்கு; முதல்வர் ஸ்டாலின்

30 மார்கழி 2024 திங்கள் 06:01 | பார்வைகள் : 297


உயர்கல்வி பயிலாத பெண்களை இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன்' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் பயன் பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புதுமைப் பெண் திட்டம் மூலம் பாரதி கண்ட கனவை நிறைவேற்றி உள்ளோம். உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கம் நிறைவேறி உள்ளது. பிள்ளையின் கல்விச் செலவுக்கு தந்தை கணக்கு பார்க்க மாட்டார், அது போல தான் நானும்.

உயர்கல்வி பயிலாத பெண்களை இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன். அனைத்து துறைகளிலும் தமிழக பெண்கள் 'டாப்' ஆக உள்ளனர். அரசு பள்ளியில், மாணவிகள் சேர்க்கை குறைந்ததாக புள்ளி விவரம் வந்ததால் புதுமைப்பெண் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. திட்டத்தால் செலவு அதிகம் என பார்க்கவில்லை, தந்தைக்குரிய செயலாக பார்க்கிறேன். மாணவர்களின் கல்விக்கு எந்த தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன்.

படிங்க..படிங்க...

புதுமைப் பெண்களே படிங்க... படிங்க... படிங்க. உங்களுக்கு உறுதுணையாக நானும் அரசும் இருப்போம். பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பின் வேலைக்கு சென்று பணியாற்ற வேண்டும். ஒரு பட்டத்தோடு நிறுத்தி விடாமல் உயர் கல்வி பயிலுங்கள். பெண்களின் கல்விக்கான அனைத்து திட்டங்களுக்கும் செலவு செய்ய அரசு தயாராக உள்ளது. தற்போது கல்வியை பொறுத்தவரை பெண்களை முன்னிலையில் உள்ளனர். ஒரு ஆண் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. அதுவே ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.