●● இலவச போக்குவரத்து!!
30 மார்கழி 2024 திங்கள் 09:00 | பார்வைகள் : 2660
டிசம்பர் 31 ஆம் திகதி புதுவருட இரவின் போது, மெற்றோக்கள், RER சேவைகள் மற்றும் ட்ராம் சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளன.
இது ஆண்டு தோறும் இடம்பெறும் பாரம்பரிய நிகழ்வாகும். வழக்கமாக அதிகாலை 2.15 மணியுடன் நிறைவுக்கு வரும் இச்சேவைகள், நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடக்கம் புதன்கிழமை காலை வரை இரவு முழுவதும் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
மெற்றோக்களில் 1, 2, 4, 6, 9 மற்றும் 14 ஆகிய ஆறு சேவைகள் இவ்வாறு இயக்கப்பட உள்ளன.
RER'களில் அனைத்து சேவைகளும் இரவு முழுவதும் இயக்கப்பட உள்ளன.
Transilien சேவைகளில் J, L, N, P மற்றும் R ஆகியவை இயக்கப்பட உள்ளன.
ட்ராம் சேவைகளில் T4 மட்டுமே இரவு முழுவதும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுவருடத்தை மதுபானத்துடன் கொண்டாடுவோர், பொது போக்குவரத்துக்களில் பயணிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.