பிரான்சில் இருந்து ஜெர்மன் சென்றவர்களில் 1,159 பேர் கைது.
30 மார்கழி 2024 திங்கள் 07:42 | பார்வைகள் : 7477
கடந்த 16 செப்டம்பர் ஜெர்மனியில் ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றவாசி ஒருவரால் நடத்தப்பட்ட கொடிய பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஜெர்மன் அரசு தனது நாட்டுடன் ஒட்டியுள்ள Autriche, Belgique, Danemark, France, Luxembourg, Pays-Bas, Pologne, République tchèque மற்றும் Suisse போன்ற நாடுகளுடனான எல்லைகளை மூடியது. நாங்கள் அறிந்ததே.
கடந்த 16 செப்டம்பர் முதல் நேற்று 29 டிசம்பர் வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக ஜெர்மன் எல்லைகளை தாண்டி உள்ளே நுழைபவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிரான்சில் இருந்து மட்டும் சட்டவிரோதமாக நுழைந்த 1,159 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் அடங்குயுள்ளனர் என ஜெர்மன் காவல்துறையினர் தொரிவித்துள்ளனர்.
மேலும் புத்தாண்டு நெருங்கும் வேளையில் எல்லைகளில் அதிக போக்குவரத்து காணப்படும் இதனை சாதகமாக பயன்படுத்தி பல சட்ட விரோதமானவர்கள் தமது எல்லைக்குள் நுழைய கூடும் எனவே எல்லை பாதுகாப்பை மேலும் இறுக்கமாக்கி உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 2024 முதல் ஆறுமாதங்கள் அதாவது மார்ச் மாதம் 2025 வரை மட்டுமே எல்லைப் பாதுகாப்புப் பரிசோதனைகள் இருக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை மே 2025 வரை நீடிப்பதற்கு தற்பொழுது முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan