Paristamil Navigation Paristamil advert login

மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!

மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!

9 ஆடி 2018 திங்கள் 11:30 | பார்வைகள் : 20253


கறுப்பினத்தின் விடிவெள்ளி பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் நினைவாக பரிசில் ஒரு பூங்கா உள்ளது... உங்களுக்குத் தெரியுமா? 
 
பரிஸ் பதினேழாம் வட்டாரத்தில் உள்ள மிகப்பெரிய பூங்காவான Parc Clichy-Batignolles பூங்கா தான் அது. அதற்கு Parc Clichy-Batignolles - Martin Luther King என இன்னுமொரு பெயரும் உண்டு. 
 
54 ஹெக்டேயர்கள் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, 17 ஆம் வட்டாரத்தில் உள்ள மிகப்பெரிய பூங்காவாகவும், பரிசின் எட்டாவது மிகப்பெரிய பூங்காவாகவும் உள்ளது. 
 
SNCFஇன் முன்னாள் 'பிரெஞ்சு ரயில்வே கொம்பனி' இங்குதான் இயங்கிக்கொண்டிருந்தது. இங்கு வைத்துத்தான் சரக்கு ரயில்களில் சாமன்கள் ஏற்றுவார்கள், இறங்குவார்கள். 
 
Batignolles நகரில் உள்ளடங்கும் இந்த பூங்கா, Épinettes நகர் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 
 
இதன் பிரதான நுழைவாயில் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள Brochant மெற்றோ நிலையத்துக்கு அருகே உள்ள rue Cardinet வீதியில் அமைந்துள்ளது. 
 
இங்கு ஒரு பிரம்மாண்டமான மழைநீர் சேமிப்பு தடாகமும் உள்ளது. இங்கு சென்றால் அவசியம் அதை பார்வையிடுங்கள். 
 
எல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு..? பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்களின் பெயர்களை வைப்பதுபோலவே.. இந்த பூங்காவுக்கும் அப்படி ஒரு பெயர் வைத்துள்ளார்கள். தவிர மார்டின் லூதருக்கும் இந்த பூங்காவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவரின் பெருமைகளை பறைசாற்றும் முகமாக இப்பெயரை வைத்துள்ளார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்