ஐரோப்பிய சுற்றுலாப்பயணிக்கு எகிப்தில் நேர்ந்த கதி

30 மார்கழி 2024 திங்கள் 10:00 | பார்வைகள் : 5090
எகிப்தில் சுற்றுலாப்பயணி ஒருவர் சுறா தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர் எகிப்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
வடக்கு மார்சா ஆலம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அவர்கள் நுழைந்துள்ளனர்.
மேலும், நீச்சல் அடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி சென்ற குறித்த இருவரும், ஆழ்கடல் பகுதிக்கு சென்றபோது சுறா ஒன்று அவர்களைத் தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் எகிப்தின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அதிகாரிகள் அந்த பகுதியை நீச்சல் வீரர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மூடியுள்ளனர்.
இதற்கிடையில் பலியாவனவர் 48 வயதுடையவர் என்று இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆதாரம் AFPயிடம் தெரிவித்தது.