'பகோடா பரிஸ்' - ஒரு ஆச்சரிய தகவல்!!
5 ஆடி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18510
பரிஸ் பக்கோடா... என்றதும் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடும் சூடான பக்கோடா ஞாபகம் வந்துவிட்டதா..? இது அதுவல்ல... இது வேற பகோடா!!
முன்னர், 1900 ஆம் ஆண்டுகளில் C. T. Loo எனும் பெயருடைய சீன நாட்டவர் ஒருவர் பரிசில் இருந்தார். பெரும் செல்வந்தர் ஆன இவர், சீனா இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் புகழ்பெற்ற ஓவியங்கள், கலைச் சிற்பங்கள் என்பவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் முகவராக இருந்தார்.
1908 ஆம் வருடம் பரிசில் இவர் ஒரு கண்காட்சி மற்றும் விற்பனை கூடம் ஒன்றை திறந்தார். Laiyuan and Company என பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தில், சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட பல கலைப்பொருட்களை விற்பனைக்கு வைத்தார். அது அனைத்தும் விற்பனையில் சக்கை போடு போட்டது.
1925 ஆம் ஆண்டு, Loo, பரிசின் எட்டாம் வட்டாரத்தில் ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதில் அவருடைய பல கலைப்பொருட்களை காட்சிக்கு வைத்தார். அந்த கட்டிடத்தின் பெயர் தான் Pagoda Paris!! (பகோடா பரிஸ்)
இங்கு சீன நாட்டின் புகழ்பெற்ற கலைகளையும், இந்திய நாட்டின் புகழ்பெற்ற கலைகளையும் ஓவியங்களாக காட்சிக்கு வைத்தார்.
Loo வின் மரணத்துக்கு பின்னர் அந்த காட்சிக்கூடத்தை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி, இன்றுவரை பராமரித்து வருகிறது.
ஆனால் இந்த 'பகோடா பரிஸ்' எனும் பெயருக்கான விளக்கம் தான் இதுவரை தெரியவில்லை!!