பரிஸ் : தொடருந்து நிலையத்தில் வைத்து ஒருவர் கைது!!
30 மார்கழி 2024 திங்கள் 15:18 | பார்வைகள் : 1715
பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள Pyramides மெற்றோ நிலையத்தில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வார வியாழக்கிழமை காலை, குறித்த நபர் குறித்த தொடருந்து நிலையத்தில் வைத்து ஜப்பானிய சுற்றுலாப்பயணி ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதன் பின்னரே அவர் குறித்த மேலும் அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்துள்ளன.
குறித்த நபர் அல்ஜீரியாவினால் சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி எனவும், தேடப்படுவோர் பட்டியலான fiché S இல் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு குறித்த நபர் அல்ஜீரியாவில் தேடப்பட்டு வந்துள்ளார். Brigade des Réseaux Franciliens (BRF) அதிகாரிகளில் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த நபர் தற்போது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.