Paristamil Navigation Paristamil advert login

பேருந்து சாரதிகள் மீது தாக்குதல்... அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள்!

பேருந்து சாரதிகள் மீது தாக்குதல்... அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள்!

30 மார்கழி 2024 திங்கள் 17:00 | பார்வைகள் : 4717


பரிஸ் மற்றும் Montreuil நகரில் இரு பேருந்து சாரதிகள் மீது அவதூறு மற்றும் அவமதிப்பு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 28 சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் அடுத்தடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலாவது சம்பவம் Montreuil (93) நகரில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பிற்பகல் 2 மணி அளவில் 122 இலக்க பேருந்து Delpêche தரிப்பிடத்தில் நின்றிருந்த போது, அவர் மீது நபர் ஒருவர் கண்ணீர் புகை வீசி தாக்குதல் மேற்கொண்டார். தாக்குதலுக்கு இலக்கான சாரதி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

இரண்டாவது சம்பவம் தலைநகர் பரிசின் 8 ஆம் வட்டாரத்தில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. Grand Palais தரிப்பிடத்தில் நின்றிருந்த 72 ஆம் இலக்க பேருந்து சாரதி மீது ஒருவர் எச்சில் துப்பியுள்ளார். அவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார். அத்தோடு பேருந்தின் முன் இரு கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.

இரு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்