Paristamil Navigation Paristamil advert login

Mayotte தீவுக்கு Starlinks மூலம் இணைய தொடர்பு!!

Mayotte தீவுக்கு Starlinks மூலம் இணைய தொடர்பு!!

30 மார்கழி 2024 திங்கள் 18:43 | பார்வைகள் : 1013


Chido புயலினால் பாதிக்கப்பட்ட Mayotte தீவுக்கு விரைவில் அதிவேக தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படும் என பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அறிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு வசதியும், இணைய சேவையும் இல்லாதது புயலினால் 4,000 பேர் காயமடையவும், 39 பேர் இறக்கவும் காரணமாக இருந்ததாகவும், அதனை உடனடியாக சரிசெய்யும் நோக்கில் எலான் மஸ்க்கின் Starlinks இணைய சேவையினை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Starlinks எனப்படுவது செய்மதி மூலம் வழங்கப்படும் அதிவேக இணையமாகும். 200 இடங்களில் அதன் நிலையங்களை அமைத்து இணைய வசதி வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவு முழுவதும் நிறைந்த 5G இணையம் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.