Paristamil Navigation Paristamil advert login

பரிசில் Berthillon குளிர்களி - ஒரு அறிமுகம்!!

பரிசில் Berthillon குளிர்களி - ஒரு அறிமுகம்!!

4 ஆடி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 18545


கோடை வெயில் வாட்டி எடுக்கின்றதா..? சில்லென ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்... ??
 
பரிசில் உலகப்புகழ் பெற்ற ஆடம்பர குளிர்களி நிலையம் ஒன்று உள்ளது. நான்காம் வட்டாரத்தில் உள்ள Berthillon குளிர்களி நிலையம் தான் அது. 
 
சென் நதிக்கு நடுவே உள்ள Île Saint-Louis தீவில் உள்ளது இந்த கடை. மிக சுவையான பாலில் தயாரிக்கப்பட்ட குளிர்களி மற்றும் சர்பத் இங்கு விற்பனைக்கு உண்டு. 
 
Raymond Berthillon என்பவரால் 1928 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கடை, விரைவில் நூற்றாடை தொட உள்ளது. 
 
 
1961 ஆம் ஆண்டு பிரெஞ்சு சமையல் நிபுணர் Gault Millau, இந்த கடை குறித்தும் அதன் சுவை குறித்தும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். அன்றில் இருந்து இது உலகம் முழுவது பிரசித்தம் ஆனது. 
 
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த குளிர்களியை விரும்பி சாப்பிட்டனர்.  தற்போது கூட இந்த குளிர்களி பிரான்சின் சுவையை பிரதிபலிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். 
 
2014 ஓகஸ்ட் 9 ஆம் திகதி Raymond Berthillon இறந்தார். தற்போது இந்த நிறுவனத்தை Chauvin குடும்பத்தினர் நிர்வாகித்து வருகின்றனர். 
 
ஆடம்பர ஐஸ்கிரீம் என்ற போதும் 'எப்போதாவது தானே??!' என்ற யோசனையோடு ஒருதடவை இதை சுவைத்து பாருங்களேன்... மறக்காமல் வீட்டில் உள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்..!! 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்