Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

3 ஆடி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 17761


இந்த தொடர், இன்றோடு நிறைவுக்கு வருகின்றது. இருபது வட்டாரங்களை கொண்ட பரிசின் இறுதி வட்டாரமான 20 ஆம் வட்டாரம் குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!
 
இருபதாம் வட்டாரத்துக்கு Ménilmontant எனும் பெயரும் உண்டு. இங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு கல்லறை ஒன்று உண்டு. 
 
Père Lachaise Cemetery எனும் இந்த கல்லறையில் பல இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என இசைத்துறையில் சாதித்தவர்கள் துயில் கொள்கின்றனர். 
 
5.97 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு, அதாவது 1,479 ஏக்கர்கள் கொண்டது இந்த வட்டாரம். 
 
தற்போதைய நிலவரப்படி, 198,000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். 20 ஆம் வட்டாரத்தில் அதிகூடிய மக்கள் தொகையாக 1936 ஆம் ஆண்டு 208,115 பேர் வசித்தது பதிவாகியுள்ளது. 
 
அதே போன்று, இங்குள்ள Parc de Belleville பூங்காவும் மிக பிரபலமான ஒன்று. குறிப்பாக கோடை காலத்தில் இங்கு அதிகளவான மக்கள் தொகையை பார்க்கலாம்...!! 
 
DGSE (Direction générale de la sécurité extérieure) படையினரின் தலைமைச் செயலகமும் இங்கு தான் இயங்குகின்றது. 
 
பிரபல கேளிக்கை பத்திரிகையான சார்லி எப்த்தோ பத்திரிகையில் தலைமைச் செயலகமும் இங்கு தான் உண்டு. 
 
தவிர, Lycée Hélène Boucher உள்ளிட்ட பல கல்லூரிகளும் இங்கு உண்டு. 
 
இங்கு இரண்டு முக்கியமான நகரங்கள் உண்டு. Belleville மற்றும் Ménilmontant ஆகிய குறித்த இரு நகரங்களை அண்மித்தே பலர் வசிக்கின்றனர். பலரது தொழில் அலுவலகமும் இந்த நகரங்களைச் சுற்றித்தான் இருக்கின்றன.  
 
****
 
இன்றோடு இந்த தொடர் நிறைவுக்கு வருகிறது. நீங்கள் பரிசில் வசித்தால்.. உங்கள் வட்டாரம் குறித்தும் அறிந்துகொள்ளக்கூடியதாக இந்த பதிவு அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்