தனுஷுக்கு உடல்நலக் கோளாறா?

31 மார்கழி 2024 செவ்வாய் 11:44 | பார்வைகள் : 2914
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். தனுஷுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த படப்பிடிப்பில் இருந்து தனுஷ் சென்னை திரும்பினார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் தனுஷின் உடல்நலம் மிக மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
தனுஷ் தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது, "இட்லி கடை படப்பிடிப்பில் புகை நிறைந்த காட்சிகளில் தனுஷ் நடிக்கும் போது அவருக்கு டஸ்ட் அலர்சி பிரச்னையால் தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெரிய பிரச்னை இல்லை" என தெரிவித்தனர்.
தற்போது உடல்நலம் சரியாகி, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.