சேவாக்கின் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!
31 மார்கழி 2024 செவ்வாய் 12:36 | பார்வைகள் : 178
இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சுமார் 1478 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
இருப்பினும் இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இளம் வீரரான ஜெய்ஸ்வால் இரண்டு இன்னிங்ஸிகளிலும் அரை சதம் கடந்து ஆறுதல் தந்துள்ளார்.
இளம் வயதிலேயே இத்தனை அனுபவம் வாய்ந்த வீரர்களைப் போல ஜெய்ஸ்வால் ஆடி வருவது, இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
மற்றொரு பக்கம் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி முதல் இன்னிங்ஸில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையூட்டியுள்ளார்.
இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஜெய்ஸ்வால் மூன்று சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்கள் என மொத்தம் 1478 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன் 1462 ஓட்டங்களுடன் 3வது இடத்தில் இருந்த இந்திய வீரர் சேவாக்கின் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்து பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அதே நேரத்தில்., ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (1562 ஓட்டங்கள் - 2010) மற்றும் சுனில் கவாஸ்கர் (1555 ஓட்டங்கள் - 1979) என முதல் இடங்களில் உள்ளனர்.