Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

2 ஆடி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 18349


பத்தொன்பதாவது நாளில், இன்று Butte-Chaumont என அழைக்கப்படும் 19 ஆம் வட்டாரம் குறித்து பல தகவல்களை பார்க்கலாம்...!! 
 
பத்தொன்பதாம் வட்டாரம், 6.78 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டது. இங்கு Canal Saint-Denis மற்றும் Canal de l'Ourcq என இரண்டு கால்வாய்கள் உள்ளன. இவை இரண்டும் Parc de la Villette இல் சந்திக்கின்றன. 
 
தவிர, 19 ஆம் வட்டாரம் இரண்டு பெரிய பூங்காக்களையும் கொண்டுள்ளது. ஒன்று மலைப்பகுதியில் உள்ள Parc des Buttes Chaumont,  மற்றையது Parc de la Villette.
 
தவிர, உலகின் மிகப்பெரிய இசைக்கல்லூரிகளில் ஒன்றான Conservatoire de Paris கூட இங்கு தான் உண்டு. 
 
பத்தொன்பதாம் வட்டாரத்தில், தற்போது எடுக்கப்பட்ட கணக்கின் படி 187,200 மக்கள் இங்கு வசிக்கின்றனர். 
 
55 ஹெக்டேயர்களை கொண்ட பரிசின் மூன்றாவது மிகப்பெரிய பூங்காவான Parc de la Villette இங்கு மிக பிரபலம். உள்ளூர் வெளியூர் வாசிகள் என பலர் இங்கு குவிகின்றனர். அதுவும் தற்போது கோடை காலத்தில், கேட்கவே வேண்டாம்!
 
அட, மூன்றாம் நெப்போலியனால் உருவாக்கப்பட்ட Parc des Buttes Chaumont பூங்கா கூட மிகப்பிரபலம் தான். சுருக்கமாக சொல்வதென்றால், கோடை விடுமுறையை உள்ளூரிலே கழிக்க 19 ஆம் வட்டாரமே போதுமானது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்