Paristamil Navigation Paristamil advert login

தென்கொரிய ஜனாதிபதி யூன் சக் இயோலிற்கு பிடியாணை!

தென்கொரிய ஜனாதிபதி யூன் சக் இயோலிற்கு பிடியாணை!

31 மார்கழி 2024 செவ்வாய் 14:29 | பார்வைகள் : 789


தென்கொரிய ஜனாதிபதி யூன் சக் இயோலிற்கு எதிரான பிடியாணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மார்ஷல் சட்டத்தை பிறப்பித்தமைக்கான காரணம் குறித்து விசாரணை செய்வதற்கு யூன் சக் இயோலை கைதுசெய்யவேண்டும் என உயரதிகாரிகளிற்கான ஊழல் விசாரணை அலுவலகம் விடுத்த வேண்டுகோளை சியோல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இதனை சட்டவிரோதமான நடவடிக்கை செல்லுபடியற்றது என குறிப்பிட்டுள்ளனர்.

அதிகார துஸ்பிரயோகம் கிளர்ச்சியை தூண்டியமை தொடர்பில் ஜனாதிபதியை விசாரணை செய்வதற்காக அதிகாரிகள் பிடியாணையை கோரியுள்ளனர்.


அதேவேளை அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான முதலாவது குற்றவியல் பிரேரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.