தயேஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் தாக்குதல்!!
31 மார்கழி 2024 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 1619
சிரியாவில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சு இராணுவத்தினர், தயேஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
டிசம்பர் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஏழு வெடிகுண்டுகளை விமானம் மூலம் அனுப்பி தாக்குதல் மேற்கொண்டதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள இராணுவ அமைச்சர் Sébastien Lecornu, தனது X சமூகவலைத்தள கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் பிரெஞ்சு இராணுவம் 2015 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ட்ரோன் கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அது சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.