●● Crit'Air 3 : வாகனங்களுக்கு தடை!!

31 மார்கழி 2024 செவ்வாய் 18:25 | பார்வைகள் : 5516
சுற்றுச்சூழல் மாசடவை வெளியிடும் அளவு தரப்படுத்தலைக் கொண்ட Crit'Air ஒட்டிகளில் 3 ஆம் இலக்கத்தைக் கொண்ட வாகனங்கள் சில நகரங்களில் தடை விதிக்கப்பட உள்ளன.
'கிரான் பரி' எனப்படும் பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும், Lyon, Montpellier மற்றும் Grenoble ஆகிய நகரங்களிலும் இந்த தடை கொண்டுவரப்பட உள்ளது. நாளை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து குறித்த நகரங்களில் இந்த தடை கொண்டுவரப்பட உள்ளது.
Crit'Air 3 இலக்கமானது 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட டீசல் வாகனங்களுக்கும், 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பெற்றோல் வாகனங்களுக்கும் வழங்கப்படுள்ளது.
'கிரான் பரி' பகுதிக்குள் 422,000 வாகனங்கள் இதனால் பாதிக்கப்பட உள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3