நாளை முதல் : இல் து பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாக மாறும் Saint-Denis !!
31 மார்கழி 2024 செவ்வாய் 19:04 | பார்வைகள் : 3046
நாளை ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இல் து பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாக Saint-Denis நகரம் மாறுகிறது.
93 ஆம் மாவட்டத்தில் உள்ள Dionysian மற்றும் Pierrefitte-sur-Seine ஆகிய இரு நகரங்களும் Saint-Denis உடன் இணைகிறது. பரிசுக்கு அடுத்ததாக அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இது மாறுகிறது. 150,000 பேர் கொண்ட நகரமாக Saint-Denis உருவெடுக்கிறது.
ஜனவரி 4 ஆம் திகதி முதலாவது நகரசபைக் கூட்டம் இடம்பெற உள்ளது. எவ்வாறாயினும்,. அஞ்சல் இலக்கத்தையும் சில உள்ளூர் அடையாளங்களையும் அவ்விரு நகரங்களும் தக்க வைத்துக்கொள்ளும் என்ற போதும், அதன் நகராட்சி மட்டும் Saint-Denis ஆக மாற்றம் பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.