Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

1 ஆடி 2018 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 18406


இன்றைய 18 ஆவது நாள் பிரெஞ்சுப் புதினத்தில், 18 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!
 
பதினெட்டாம் வட்டாரம் என்றதும் என்ன ஞாபகம் வரும்.? போர்த்து லா சப்பல்.. தமிழர்கள்..? அவற்றையும் தாண்டி பல ஆச்சரியங்கள் இங்கு உண்டு!
 
18 ஆம் வட்டாரம் 1,484 ஏக்கர்களை கொண்டது. அதாவது, சரியாக 6 சதுர கிலோமீட்டர்கள். 
 
1931 ஆம் ஆண்டு, இந்த வட்டாரத்தில் அதிகூடிய மக்கள் தொகையாக 288,000 பேர் வசித்தனர். தற்போது 1,80,000 பேர் இங்கு வசிக்கின்றனர். 
 
இதற்கு dix-huitième என ஒரு பெயர் உண்டு. தவிர, Montmartre என அழைக்கப்படும் மலைப்பிரதேசம் இங்கு உண்டு. 
 
மிக முக்கியமாக, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் Quartier Pigalle என்ற பகுதியும் மிக பிரபலம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. 
 
போர்த்து லா சப்பலையும், தமிழர்களின் கடைகளையும், அந்த பிள்ளையார் கோவிலையும் அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. 
 
Dailymotion நிறுவனத்தின் தலைமையகம் இங்கு இருந்தது.  அது தவிர, பிரெஞ்சு காமிக்ஸ் கதைகளின் ராஜாவான Dargaud நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு தான் உள்ளது. 
 
Sacré-Cœur தேவாலயம், 100 வருடங்களுக்கு முற்பட்ட Sainte-Jeanne-d'Arc, என பல ஆச்சரியமான விடயங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்