Paristamil Navigation Paristamil advert login

புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்ற சோம்ப்ஸ்-எலிசே!!

புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்ற சோம்ப்ஸ்-எலிசே!!

1 தை 2025 புதன் 08:00 | பார்வைகள் : 1081


பல ஆயிரக்கணக்கான மக்கள் சோம்ப்ஸ் எலிசேக்கு முன்னாள் கூடி நின்று "Bonne annee 2025" என கோஷமிட, நள்ளிரவு 12 மணிக்கு வானவேடிக்கையுடன் புத்தாண்டு பிறந்தது.

Champs-Élysées நேற்று இரவு முதல் களை கட்டியது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவுக்காக மக்கள் காத்திருந்தனர். பின்னர் arc de triomphe இல் தோற்றுவிக்கப்பட்ட எண்களை பத்தில் இருந்து இறங்குமுகமாக எண்ணி நள்ளிரவு 12 மணிக்கு அனைவரும் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். arc de triomphe இற்கு மேலாக வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டு அதில் DJ இசைக்கப்பட்டது.

எந்த அசம்பாவிதங்களும் இன்றி புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டம் மகிழ்ச்சியாக இடம்பெற்றது.